Thursday, December 14, 2017

முத்திரை - 2

முத்திரை - விளக்கம்

முத்திரைகளின் விளக்கம்(1முதல்  35 வரை)
1. குரு வந்தன முத்திரை : ஸுமுகம் : விரித்து, பக்க வாட்டில் சேர்ந்த இரு கைகளையும் உள்ளங்கைகள் நம் முகத்தைப் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தல்.
2. குரு வந்தன முத்திரை : ஸுவ்ருத்தம் : ஸுமுக (1) முத்திரையில் விரல்களை மடக்குதல். கட்டைவிரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
3. குரு வந்தன முத்திரை : சதுரச்ரம் : மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் கைகளை விரித்து (இடது கை கீழே) மணிக்கட்டு அருகே சேர்த்தல்.
4. குரு வந்தன முத்திரை : முத்கரம் : கட்டைவிரல்கள் தன்னை நோக்க, இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.
5. குரு வந்தன முத்திரை : யோனி : இரு மோதி விரல்களையும், நடுவிரல்களின் பின்பக்கமாக வளைத்துக் கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால் பிடித்துக் கொள்ளவும்; இடது சுண்டுவிரலை வலது சுண்டுவிரலால் பிடித்துக் கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால் நடுவிரல்களின் நடுப்பகுதியைத் தொடவும்.
6. குரு வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல். மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.
7. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : மத்ஸ்யம் : வலது உள்ளங்கை கீழ் நோக்க, இடது உள்ளங்கை அதனைத் தாங்க, கட்டை விரல்களை மட்டும் மீனின் செதில்களைப் போல் அசைத்துக் காட்டுதல்.
8. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.
9. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அவகுண்டனம் : கைமுட்டிகளைக் கீழே காட்டி, வலது ஆட்காட்டி விரலால் ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி விரலால் அப்ரதக்ஷிணமாகவும் இலக்கைச் சுற்றிக் காண்பித்தல்.
10. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : தேனு - அம்ருதீகரணம் : ஒரு கையின் சுட்டு விரல் மற்றதின் மோதிர விரலைத் தொடவும், ஒன்றின் நடுவிரல் மற்றதின் ஆள்காட்டி விரலைத் தொடவும் செய்வது. (பால் இறங்கி நிற்கும் பசுவின்மடி போல் காணப்படும்.)
11. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : காலினீ : இடது கை மேல் நோக்க, வலது கையைக் கவிழ்த்து, விரல்களை வளைத்துப் பிடித்தல். இடது கட்டை விரலும் வலது சுண்டுவிரலும் சேர்ந்து காணும் இடைவெறி மூலம் விசேஷார்க்யத்தப் பார்க்க உதவும் முத்திரை.
12. ஆவாஹனாதி முத்திரை : ஆவாஹனீ : ஸுமுக (1) முத்திரையில் கட்டை விரல்களால் மோதிர விரல்களின் அடிப்பாகத்தை தொட்டு அசைத்தல்.
13. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஸ்தாபனீ (ஸ்தபனீ) : ஆவாஹனீ (12) போலவே கீழ் நோக்கிச் செய்தல்.
14. ஆவாஹனாதி முத்திரை : ஸந்திதாபனீ : கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில் சேர்த்து, கட்டை விரல்களை மேல் நோக்கிப் பிடித்தல்.
15. ஆவாஹனாதி முத்திரை : ஸந்நிரோதினீ : கட்டைவிரல்கள் உள்ளே மறைய, மற்ற நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச் சேர்த்துப் பிடித்தல்.
16. ஆவாஹனாதி முத்திரை : ஸம்முகீகரணீ : விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை பக்க வாட்டில் சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.
17. ஆவாஹனாதி முத்திரை : வந்தனீ : கைகூப்பி, விரல்கள் வளையாது, மார்புக்கு நேரே வந்தனம் செய்தல்.
18. ஆவாஹனாதி முத்திரை : தத்வம் : மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது கை மோதிர விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.
19. ஆவாஹனாதி முத்திரை : சின் முத்திரை () ஜ்ஞாந முத்திரை : வலது உள்ளங்கை வெளியே நோக்க, மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.
20. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஹாரம் (நிர்யாணம்) : இடக்கை கீழ் நோக்க, அதன் மேலே வலக்கையினை மேலே நோக்குமாறு வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு அசைத்துக் காட்டுதல்.
21. நியாஸ முத்திரை : முகம் : நான்கு வலக்கை விரல்களால் உதடுகளைத் தொடுதல்.
22. நியாஸ முத்திரை : கரசம்புடம் : ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக் குவித்துப் பிடித்தல்.
23. நியாஸ முத்திரை : அஞ்ஜலி (நமஸ்காரம்) : இரண்டு கைகளையும் சேர்த்து, விரல்களை இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னியுற வைப்பது.
24. நியாஸ முத்திரை : ஹ்ருதயம் : வலக்கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் இதயப் பகுதியைத் தொடுதல்.
25. நியாஸ முத்திரை : சிரஸ்: வலக்கையில் நடு மற்றும் மோதிர விரல் நுனிகளால் தலை உச்சியைத் தொடுதல்.
26. நியாஸ முத்திரை : சிகை : வலக்கை கட்டை விரல் நுனியால் சிகை (குடுமி) இருக்க வேண்டிய இடத்தைத் தொடுதல்.
27. நியாஸ முத்திரை : கவசம் : கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும் தோள்களைத் தொடுதல்.
28. நியாஸ முத்திரை : நேத்ரம் : வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால், இரு கண்கள், அவற்றின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடுதல்.
29. நியாஸ முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.
30. நியாஸ முத்திரை : ந்யாஸம் : வலது கை கட்டை விரலால் மடங்கிய மூன்று விரல்களைச் சேர்த்தபின், ஆட்காட்டி விரலால் அங்கங்களைத் தொடுவது.
31. நிவேதன முத்திரை : க்ராஸம் : மேல் நோக்கும் இடது கையால், கிண்ணத்தில் அன்னம் இருப்பது போல் பாவனையாகக் காட்டுவது.
32. நிவேதன முத்திரை : ப்ராணன் : வலது கை நடுவிரலையிம் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
33. நிவேதன முத்திரை : அபானன் : வலது கை மோதிர விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதன் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
34. நிவேதன முத்திரை : வ்யானன் : வலது கை சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.
35. நிவேதன முத்திரை : உதானன் : வலது கை மோதிர விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

-தொடரும்

ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms