Thursday, February 18, 2016

கும்பகோணமும் கோயில்களும்

தமிழகத்தில் வானளாவி நிற்கும் பெரும்பாலான சைவ வைணவ ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றாலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வானவியல், ஆன்மீகம் போன்றவற்றின் சிறப்புகளுக்குச் சான்று கூறுவனவாய் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 34 ஆலயங்களும், 108 வைணவ ஆலயங்களில் 9 ஆலயங்களும் குடந்தை என்று அழைக்கப்படும் கும்பகோணத்திலேயே காணப்படுகின்றன. இதனால்தான் இவ்வூர் கோவில் மாநகர்என்றும் அறியப்படுகின்றது போலும். குடந்தை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் பிற்காலத்தில் கும்பகோணம் என்ற பெயரில் அருணகிரி யார் வாக்கில் திருப்புகழில் முதன்முதல் இடம் பெற்றது.

கும்பகோணத்தை சுற்றியுள்ள கோயில்கள் அறிய உதவும் வரைப்படம்(க்ளிக் செய்து பார்க்கவும்)
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம்  என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம்.

சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.

குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்" கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".

சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்த அமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது. 

பஞ்சகுரோசத்தலங்கள்
திருவிடைமருதூர்திருநாகேஸ்வரம்,தாராசுரம்சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.

சப்தஸ்தானம்
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அல ங் ரிக்கப் பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர்தாராசுரம்திருவலஞ்சுழி,  சுவாமிமலை, கொட்டையூர்மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். 

இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன.

மகாமகக் குளம்
கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. 

நகரின் ஆன்மீகப் பெருமை
கும்பகோணம் "கோவில் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை  மகாமகம் கொண்டாடப்படுகிறது.

மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது.

164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேரும் ஒன்றாகும்.

யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக தாராசுரம் கோவிலை அறிவித்திருக்கிறது.

கணிதமேதை இராமானுஜம் அவதரித்த ஊர்,

சங்க இலக்கியப் பொக்கிஷத்தைத் தேடித் தந்த .வே. சாமிநாதய்யர் கல்லூரிப் பேராசிரியராய்த் தமிழ் கற்பித்த ஊர் என்ற பெருமையும் கும்பகோணத்திற்கு உண்டு.

மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட செல்வோர் இங்குள்ள கோயில்களையும் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள மற்ற கோயில்களையும் தரிசனம் செய்யலாம்.

கும்பகோணம்-நகரில்அமைந்துள்ள முக்கிய திருக்கோயில்கள்

அருள்மிகுஸ்ரீபகவத்வினாயகர்,கும்பகோணம்

அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில்,கும்பகோணம்

அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில்கும்பகோணம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்கும்பகோணம்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில்கும்பகோணம்

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில்கும்பகோணம்

அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்,கும்பகோணம்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் ,கும்பகோணம்

அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்,கும்பகோணம்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் ,கும்பகோணம்

அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் திருக்கோயில்,கும்பகோணம்

அருள்மிகு ரேணூகாதேவி திருக்கோயில் ,கும்பகோணம்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,கும்பகோணம்

அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்,கும்பகோணம்

அருள்மிகுபாணபுரிஸ்வரர் திருக்கோயில் ,கும்பகோணம்

Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms