வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Saturday, June 9, 2012

சப்தகன்னியர் வழிபாடு -பிராம்மி



 சப்தகன்னியர் வழிபாடு

சப்தகன்னியர் வழிபாட்டின் மூலமாக அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் என ஏழு(சப்த) ற்லும் கிடைக்கின்றன.

அது எவ்வாறு பெறலாம் என்பதை காணலாம்.

முதலில்,

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ..எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
***************************


****இந்த வலைப்பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கு கிடைத்த புத்தக வாயிலாக படித்த, கேட்க பெற்றவையாகும். மேலும் இவை ஆன்மீக,மத சம்மந்த பட்டவையானதால் தவறுகளோ அல்லது எழுத்துப்பிழைகளோ இருப்பின் சுட்டி காட்டினால் திருத்திக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்****

சப்தகன்னியர் வழிபாடு


 சப்தகன்னியர் வழிபாடு


சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

சப்தகன்னியர் வழிபாடு -மகேஸ்வரி


 சப்தகன்னியர் வழிபாடு

இரண்டாவதாக,
மகேஸ்வரி


அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றதுஎருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.



தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
********************************************************
 
****இந்த வலைப்பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கு கிடைத்த புத்தக வாயிலாக படித்த, கேட்க பெற்றவையாகும். மேலும் இவை ஆன்மீக,மத சம்மந்த பட்டவையானதால் தவறுகளோ அல்லது எழுத்துப்பிழைகளோ இருப்பின் சுட்டி காட்டினால் திருத்திக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்****

Friday, June 8, 2012

குசும்பு குடுமியாண்டியும் & நமீதாவும்


நான் அரசியல்வாதியாக இருந்தால் சாலை விதிகளை மீறுபவர்களை கடுமையாக தண்டிப்பேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் இந்திய மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங் ஆட்ஸ் இணைந்து ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மோட்டோ ஷோ 2012 என்கிற ஆட்டோபொபைல் கண்காட்சியை நடத்தவிருக்கிறது. இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

வாகனங்களைச் சந்தைப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர். அதற்காக மோட்டோ ஷோ 2012 நடைபெறும் முன்பு, ஜூன் 10 காலை சென்னை பெசன்ட் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் விழ்ப்புணர்வு நடைப்பயணம் நடைபெற உள்ளது. இதனை நடிகர் பரத்தும், நடிகை நமீதாவும் இதை துவக்கி வைக்கின்றனர். இதற்கான அறிமுக கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகை நமீதா பேசியதாவது, கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஒரு படப்பிடிப்பு சென்று திரும்பும்போது மிகப்பெரிய விபத்தில் இருந்து உயர் தப்பினேன். அதற்கு முக்கிய காரணம், நான் காரில் பயணிக்கும்போது சீட்பெல்ட் அணிய மறந்ததில்லை. ஒரு சிலரது கவனக்குறைவால் போக்குவரத்து விதி மீறலால் பலரும் பாதிக்கப்டுகின்றனர். இதனால் அவர்களது குடும்பம், நண்பர்கள் உள்ளிட்டவர்களும் கஷ்டப்படுகிறார்கள். போக்குவரத்து விதிகள் உடைப்பதற்கே என்கிற மன நிலை நம் நாட்டில் இருக்கிறது.. அது மாறவேண்டும்... மிகவும் வெப்பமான சீதோஷ்ண நிலையில் ஹெல்மெட் போடுவது கஷ்டமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தலைமுடியினை மிகவும் ஷாட்டாக வெட்டிக் கொள்ளலாமே!... என்று மிகவும் உரிமையுடன் ஆதங்கப்பட்ட நமீதா சுற்றுப்புறங்களை மாசு படுத்து பவர்களையும் ஒரு பிடி பிடித்தார்.

பொது இடங்களில்இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளக்கூடாது... எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளைப் போடுதல் கூடாது என்று வலியுறுத்திய நமீதா, நான் அரசியல் வாதியாக இருந்தால் அப்படிச் செய்பவர்களுக்கு 5000 ,10000 என்று மிகக்கடினமான அபராதம் விதிப்பேன்.. என்றார்.

நடிகர் பரத் பேசியபோது, நள்ளிரவு நேரம் என்றாலும் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்று எனது டிரைவருக்கு உத்தரவு போட்டிருக்கிறேன். நானும் அதனை முழுமையாகப் பின்பற்றுகிறேன். போக்குவரத்து விதிகளை மீறி நம்மால் யாருக்கும் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது. போக்குவரத்து விதிகளை ஒரு சிலர் மட்டும் பின்பற்றினால் போதாது. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த மாதிரி விழிப்புணர்வு சம்பந்தமான விழாக்களுக்குக் கூப்பிடும் போது உடனே ஒத்துக் கொள்கிறேன். அவர்களை பலமுறை அழைக்க வைத்து அலைக்கழிப்பதில்லை. போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது நமது கடமை என்று பேசினார் நடிகர் பரத் மேலும் பரத் இதுவரை பொது இடங்களில் ஒரு காகிதத்தைக் கூட வீசினதில்லை. சிறிய குப்பைகள் ஆனாலும் குப்பை சேகரிக்கும் இடங்களைத் தேடிச் சென்று கொட்டும் வழக்கமுடையவராயிருக்கிறாராம். 08.06.2012
 குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கனும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms